பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்


கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட அனைத்து ஜாமத்களின் ஒருங்கிணைபாளர் இனாயத்துல்லாஹ் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில்:-

பாஜக அரசு கொண்டுவரும் பொது சிவில் சட்டம் என்பது, முஸ்லீம்களின் தனி நபர் சட்டத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும், அவரது மத நெறிகளை பின்பற்றி வாழ உரிமை உண்டு, அதன்படி, முஸ்லீம்களுக்கு சரியத்து சட்டம் உள்ளது. இந்த சட்டமானது குர்-ஆனின் நெறிகளுக்கும், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல்களுக்கும் உட்பட்டது. தற்போது கொண்டுவரும் பொது சிவில் சட்டத்தால் முஸ்லீம்களின் கலாச்சாரம் மற்றும் நெறிகள் முடக்கப்படுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் படி, முஸ்லீம்கள் அனைவரும் பொது சிவில் சட்டத்தை எதிர்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாளை கைய்யெழுத்து இயக்கத்தை கோவை மாவட்டம் முழுவதும் நடத்த தீர்மானித்துள்ளோம். அனைவரும் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட உள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள 135 மசூதிகளிலும் நாளை கையெழுத்து இயக்கம் தொடங்குகிறது. 

இவ்வாறு அவர் கூறினார். 

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பல்வேறு முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...