2 லட்சம் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் !


கோவை திருமலையாம்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள தக்காளி தோட்டத்தில் புகுந்த 12 காட்டு யானைகள், சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தி உள்ளது. யானைகள் ஊருக்குள் புகுந்து  பொதுமக்களை அச்சுறுத்துவது சமீப காலங்களில் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் யானைகள்  ஊருக்குள் புகுந்து தாக்கி வருவது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை திருமலையாம்பாளையம் பிரிவு பகுதியில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. சுமார் 10 ஏக்கர் பரப்பிலான தோட்டத்தில் வாழை, தக்காளி, தென்னை உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் 1 மணி அளவில் நாகராஜின் தோட்டதிற்குள் புகுந்த 12 காட்டு யானைகள் தக்காளி தோட்டத்தை சேதப்படுத்தியதோடு அருகில் இருந்த வாழை தோப்பில் புகுந்து சுமார் 20 க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் சாய்த்துள்ளது. 



பின்னர், தோட்டத்தில் அமைந்துள்ள தோட்ட குடிசையை காட்டுயானைகள் தாக்கி உள்ளது. அப்போது குடிசையில் தங்கி இருந்த விவசாயி வடிவேல் நாய் குரைக்கும்  சத்தம் கேட்டு எழுந்துபார்த்தபோது யானைகள் குடிசையை சுற்றி உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் உயிருக்கு பயந்து தோட்டத்தை விட்டு வெளியேறியவரை சில யானைகள் அவரை துரத்தியதோடு, குடிசையில் வைத்திருந்த அரிசி, பருப்பு மற்றும் தென்னை வெல்லம் ஆகியவை உட்கொண்டதுடன், சாலை குடிசையை இடித்து தள்ளியதில் உள்ளிருந்த டிவி உள்ளிட்ட பொருட்களும் நொறுக்கியது.



யானைகளிடமிருந்து தப்பித்த வடிவேல் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தாமதமாக வந்த வனத்துறையினர், பட்டாசுகளை வெடித்து யானைகளை பக்கத்து  தோட்டத்திற்கு விரட்டினர். யானைகள் விலை நிலங்களில் புகுந்ததின் காரணமாக சுமார் 2லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்திருப்பதாகவும், இதற்கான உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் எனவும் தோட்ட உரிமையாளர் நாகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். 



மேலும் யானைகள் ஊருக்குள் புகுந்து அச்சுறுத்துவது சமீப காலங்களில் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் யானைகள் கூட்டமாக ஊருக்குள் புகுந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். ஊருக்குள் புகும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஒரே சமயத்தில் 12 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்திய சம்பவம் விவசாயிகளிடம் பீதியை கிளப்பியுள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...