திருமலையம்பாளையத்தில் யானைகள் தொடர் அட்டகாசம்!


கோவை திருமலையாம் பாளையம் விவசாய நிலத்திற்குள் இரண்டாவது நாளாக புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த 600 க்கும் மேற்ப்பட்ட வாழை மரங்களை நாசம் செய்தது, வனத்துறை அலட்சியத்தால் விவசாய பயிர்கள் நாசமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கோவை திருமலையாம் பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பரின் தோட்டத்திற்குள் நேற்று முன் தினம் புகுந்த 13 காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்ட ஒரு ஏக்கர் தக்காளி பயிர் மற்றும் தென்னை, வாழை , தேக்கு மரங்களை நாசம் செய்தது, இதை அடுத்து விடிய விடிய போராடி யானை காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டது, இதை தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று இரவு 11 மணியளவில் 3 குட்டிகளுடன் மொத்தம் 9 யானைகள் பக்கத்துத்தோட்டமான கோயஸ் தோட்டம் உரிமையாளர் பி.வி. முகமது தாஷிர் என்பரின் தோட்டத்தில் புகுந்து அங்கு பயிரிடப்பட்ட 600 க்கும் மேற்ப்பட்ட வாழை மரங்களையும் முற்றிலுமாக நாசம் செய்தது. 



மேலும் சுற்றுச்சுவரை உடைத்து அங்குள்ள ஒரு தொழிற்சாலைக்குள் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. மாலை 3 மணிக்கே வருவதாக கூறிய வனத்துறையினர், இரவு ஒரு மணி வரை வராத்தால் அப்பகுதி விவசாயிகளே வனத்திற்குள் விரட்டியடித்தனர். வனத்துறைத்துறையினர் அலச்சியபோக்கே இந்த நாசத்திற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.  மேலும் விரட்டியடிக்கப்பட்ட யானைகள் பக்கத்துத்தோட்டதிற்குள் நுழைந்ததால் இரவு முழுவதும் தூங்காமல் அப்பகுதி விவசாயிகள் விழித்திருக்க நிலை ஏற்ப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...