2.4 கிலோ கஞ்சா பறிமுதல்!


புளியம்பட்டியிலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற கேரளாவை சேர்ந்த இருவரை கோவை காரமடை வனத்துறையினர் பிடித்து போதை பொருள் தடுப்பு நுன்னறிவு பிரிவு போலிஸிடம் ஒப்படைத்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட இருவரும் கோவை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டனர்.



கோவை காரமடை வனப்பகுதியில் நேற்று மதியம் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கேரளா பதிவு எண் கொண்ட பொலேரோ வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 2.4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர். போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.



மேலும் அவர்களிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு நுன்னறிவு காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் காரின் உரிமையாளர் சதீஷ் குமார் என்றும்,மற்றொருவர்கள் ரமேஷ் குமார் என்பதும் தெரிய வந்த்து. மேலும் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் இருந்து கேரளா மாநிலம் பாலக்காடுக்கு எடுத்துசென்றதும் தெரிய வந்தது, இதை அடுத்து கார் மற்றும் கஞ்சா உள்ளிட்ட பொருட்களை பரிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...