ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான குறை நிவர்த்தி முகாம்

கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி, ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு சேரவேண்டிய ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியப் பலன்கள் இதுவரை கிடைக்காமல் இருந்தால், இது குறித்து தங்கள் குறைகள் மற்றும் எந்த அலுவலர்கள் மூலம் குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் போன்ற விவரங்களை தெளிவாக ஓய்வூதிய குறைதீர்ப்பு மாதிரிப் படிவத்தில் எழுதி மனுக்களை இரட்டை பிரதிகளில் கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 09/11/2016க்குள் கிடைக்கும்படி நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஓய்வூதிய குறைதீர்ப்பு மாதிரிப் படிவத்தில் எழுத வேண்டியவை:


1.பெயர் மற்றும் முகவரி :
2.பி.பி.ஓ எண் :
3.ஓய்வு பெற்ற நாள் :
4.கடைசியாக வகித்த பதவி மற்றும் துறை :
5.குறைகள் விவரம் (தனித்தாளில் விரிவாக எழுதி படிவத்தில் இணைக்கவும்) :
6.முந்தைய தகவல் ஏதும் இருப்பின் விவரம் :
7.இது தொடர்பாக வழக்கு ஏதும் தொடர்ந்திருந்தால் அதன் விவரம் :
8.குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அலுவலகம் மற்றும் அலுவலர் விவரம் :

மேலும், இதுதொடர்பாக ஓய்வூதியர் குறைகளை நேர்முகக் கூட்டம் வருகிற 15/11/2016 செவ்வாய் அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் காலை 10:30 மணிக்கு மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சென்னை ஓய்வூதிய இயக்குனர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நேர்முக கூட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...