கோவை ரயில் நிலையத்தில் அனைத்து மகளிர் உதவி மையம் திறப்பு

தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம் துவக்கப்பட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, கோயம்புத்தூர் ரயில்நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம் அருகே, அனைத்து மகளிர் உதவி மையம் இன்று (01.11.2016)  திறக்கப்பட்டுள்ளது. இது போன்று இந்திய ரயில்வேயில் முதன் முறையாக தெற்கு ரயில்வேயில் 7 ரயில் நிலையங்களில் மகளிர் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 



இந்த அனைத்து மகளிர் உதவி மையத்தில் பெண் பயணிகளுக்கு தேவையான ரயில் பயணம் சம்பந்தப்பட்ட அனைத்து உதவிகளும் சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு பெண் ஊழியர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படை பெண் காவலர்களால் வழங்கப்படும். மேலும், பெண் பயணிகள் முன்னர் பணம் செலுத்தி பயணம் செய்யும் ஆட்டோ வசதி மற்றும் அரசு ரயில்வே போலீசாரிடம் ஏதாவது புகார்செய்ய விரும்பினால் அதற்கான வசதி ஆகியவைவும் செய்து தரப்படும். மேலும் பச்சிளம் குழந்தைகளுக்கு பாலூட்ட விரும்பும் தாய்மார்களின் வசதிக்காக தனியாக பாலூட்டும் அறையும் அமைக்கப்பட்டுள்ளது. 



தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் அனைத்து முக்கிய ரயில்நிலையங்களிலும் இது போன்ற அனைத்து மகளிர் உதவி மையங்கள் விரைவில் திறக்க ஏற்பாடு செய்யப்படும்.

Newsletter

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...