கோவையில் 12 பகுதிகளில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.


கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் பறவை காய்ச்சல் நோய் பரவி உள்ளதை தொடர்ந்து, தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 

கோவை மாவட்டத்தில் வாளையாறு, வேலாந்தவளம், ஆனைக்கட்டி உள்ளிட்ட 12 பகுதிகளில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி மருந்து தெளித்த பின்னரே தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன. மேலும் கேரள மாநிலத்த்தில் இருந்து வாத்து, கோழி, முட்டை உள்ளிட்டவை ஏற்றி வரும் வாகனங்கள்திருப்பி அனுப்பப்படுகின்றன. 

கோவை கோட்டத்தில் 5 சோதனைச்சவடிகளும், பொள்ளாச்சி கோட்டத்தில் 7 சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க கால்நடை பராமரிப்பு துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் தமிழ்செல்வன் தெரிவித்தார். மேலும் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மருந்துகள் தேவையான அளவு கையிருப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

கோவை மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், நோய் தாக்கத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...