காந்திபுரம் வணிக சாலையை சீர் செய்யக்கோரி தேமுதிக புகார்


காந்திபுரம் பகுதியில் பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்கக் கோரி தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. 

கோவை மாவட்டம் 51 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளான காந்திபுரம் 5 முதல் 9 வது வீதி, நேரு வீதி, லஜபதிராய் வீதி, விவேகானந்த வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு நிலத்தடியில் மின்சாரக் கம்பி புதைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தற்போது வரை மிக மந்தமான நிலையிலும், பணிகள் முடிந்த பகுதிகளில் சாலை சீரமைக்கப்படாமலும் மேற்கண்ட பகுதிகளில் மிகமோசமான நிலையில் சாலைகள் காணப்படுகின்றன. 

நகரத்தின் முக்கிய பகுதி மற்றும் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகவும் இருக்கும் காந்திபுரத்திற்கு நாள்தோரும் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர். மேலும் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், முதியவர்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குண்டும், குழியுமான இச்சாலையினால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக இச்சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...