பெட்ரோல் பங்க் நேரம் குறைப்பு!


நவம்பர் 5ம் தேதியன்று (வெள்ளி) முதல், பெட்ரோல் பங்குகளின் நேரம் குறைக்கப்படும் எனவும், வார விடுமுறை அளிக்கப்படும் எனவும் தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு, டீலர் கமிஷனை உயர்த்தி வழங்குமாறு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை மத்திய அரசு அமைத்த கமிட்டி பரிந்துரை செய்தும், எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை அறிவித்துள்ளனர். அதன்படி, கடந்த மாதம் இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை பங்குகள் மூடப்பட்டன. 

இந்நிலையில், தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் கூட்டமைப்பின் தலைவர் முரளி செய்தியாளர்களிடம் பேசிய போது, ''டீலர் கமிஷன் தொடர்பாக, எண்ணைய் நிறுவனங்களிடம் மும்பையில் இன்று பேச்சு வார்த்தை நடக்கிறது. பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை எனில், நாளை (நவ.5ம் தேதி) முதல் பெட்ரோல் பங்க்கில் விற்பனை நேரம் குறைக்கப்படும். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்க் இயங்கும். அதன் பின் வங்கிகள் போல் வாரவிடுமுறையும் விடப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...