தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 'எங்கள் தேசம் எல்லோருக்குமான தேசம்' பிரச்சாரம் ஆலோசனைக் கூட்டம் .

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் எங்கள் தேசம் எல்லோருக்குமான தேசம் பிரச்சாரம் நவம்பர் 7 ம் தேதி சர்.சி.வி.ராமன் பிறந்த நாளையொட்டி நடைபெறுகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவை தாமஸ் கிளப்பில் நடைபெற்றது.  
 

இந்தியாவில் தற்போது மதம் மற்றும் சாதியங்கள் தலைதூக்கி உள்ளது.  இதை முறியடிக்கும் வகையில் இந்தியாவின் பன்முகத் தன்மையும், சமூக நீதியையும் பாதுகாக்கும் வகையிலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர் 7ம் தேதி சர்.சி.வி.ராமன் பிறந்தநாளை யொட்டி 'எங்கள் தேசம்' என்ற கோஷத்தோடு நாடு முழுவதும பிரச்சார இயக்கம் நடைபெற உள்ளது. 

இப்பிரச்சார இயக்கத்தில் வரலாற்று ஆய்வு மாநாடுகள் அறிவியலின் வரலாற்று நிகழ்வுகள், உலகம் மற்றம் மனிதம் தோன்றிய வரலாறுகள், தெருமுனை பிரச்சாரங்கள் மாணவர்களுக்கான கட்டுரை/ ஓவிய போட்டிகள் நடைபெறவுள்ளது.  இதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் நவம்பர் 7ம்தேதி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, நவ. 19ம் தேதி ஆசிரியர்கள் அறிவியல் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்திற்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பெ.நடராஜன் தலைமை விகித்தார்.  மாநில தலைவர் பேராசிரியர் மேகலா, மாநில ஒருங்கிணைப்பாளர் முகமது பாதுஷா, மாவட்ட செயலாளர் ஆர்.கண்ணபிரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இப்பிரச்சார் இயக்கம் 2017ம் ஆண்டு நவம்பர் வரை ஓராண்டு காலம் நடத்தப்படும் என அலோசனையில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...