நொய்யல் நதியின் முன்னாள் தோற்றத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச்சென்ற பக்தி நிகேதன் நாட்டிய அமைப்பினர்


கொங்கு மண்டலத்தின் நீராதாரமாகவும், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள விலங்குகளின் வாழ்வாதாரமாகவும் திகழ்ந்தது நொய்யல் நதி பல்வேறு விதமான உயிரினங்களின் நீர்த்தேவையினை ஒரு காலத்தில் நொய்யல் பூர்த்தி செய்து வந்தது. ஆனால், மனிதர்களின் வளர்ச்சி மற்றும் சரியான பராமறிப்பின்மையால் நொய்யல் நதி தற்போது வழித்தடமாக மாறியுள்ளது. இதனை மீண்டும் மீட்டெடுத்து நொய்யல் நதியை செழிப்படையச் செய்ய வேண்டும் என பல தன்னார்வலர்களும், சமூக ஆர்வலர்களும் முயற்சித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக பக்தி நாட்டிய நிகேதன் என்னும் நாடக அமைப்பின் சார்பில் நொய்யல் நதி குறித்தான ஒரு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கருணசாகரி ஏற்பாடு செய்திருந்தார். 



இந்த நாடக நிகழ்வின் போது அந்த அமைப்பின் நடனக் குழுவினர் நொய்யலின் கடந்தகாலத் தோற்றத்தினை அப்படியே நடனமாக வெளிப்படுத்தி பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.

ஆறுகள் தான் தண்ணீரின் அடிப்படை ஆதாரமாக உள்ளது. ஆனால், மக்கள் வசிக்கும் பகுதியில் குழாய்களில் நீர் வருவதினால் மக்களுக்கு நதிகள் அழிந்துவருவது குறித்து சிறிதும் கவலையில்லை. அதுவும் ஒருகட்டத்தில் வற்றிவிடும். அப்போது, நீரின் ஆதாரமான ஆறுகள் குறித்து நாம் கவலையடைவோம்.

பல்வேறு ஆண்டுகலாக கோவை மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகள் நொய்யலால் பயனடைந்து வந்தன. நாம் அதனை அழித்ததன் தொடர்ச்சி அதனால் பயனடைந்து வந்த விவசாயம் மாய்ந்துபோனது. அதனை நம்பி இருந்த பல உயிரினங்கள் இடம்பெயர்ந்தன.

அழிவின் பாதையில் இருந்து இயற்கையையும், நம்மையும் பாதுகாக்க நொய்யலை மீட்டெடுப்பது அவசியம் என்ற கருத்தினை மையமாகக் கொண்டு பக்தி நாட்டிய நிகேதன் அமைப்பினர் நடனம் நிகழ்த்தினர். நடனக் கலைஞர்களின் சிறப்பான நடனம் பார்வையாளர்களை நொய்யலின் முந்தைய காலத்திற்கே அழைத்துச் சென்றதாக அமைந்தது. கலைஞர்கள் தங்கள் நடனத்திறன் மூலம் நொய்யலை திரும்பப் பெறுவது, அதை நாம் இன்னும் பொறுப்புடனும், சூழலியல் நட்புடனும் பாதுகாப்பது என்று வலியுறுத்தினர்.





























Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...