நீலகிரியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஆட்சியர் திடீர் ஆய்வு


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரையில் துவங்கவுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரித முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை நீர் வடிகால் அமைப்பு, குளங்கள், நீர்த்தேக்கம் உள்ளிட்டவை கனமழையின் காரணமாக வெள்ளம் பாதிக்காதவாறு துறை அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வடிகால் துறை, சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத் துறை, கால்நடைத் துறை உள்ளிட்ட பிரிவுகளின் சார்பிலும் வடகிழக்கு பருவமழை அவசரக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர், அம்மாவட்டத்திற்கு உட்பட்ட வெள்ளம் பாதிப்புகள் ஏற்படக் கூடிய சில பகுதிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். குன்னூர்க்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் ஆய்வில் ஈடுபட்ட ஆட்சியர் அப்பகுதியில் இருந்த ஒரு பெட்டிக் கடை வியாபாரியிடம், அவரது வியாபாரம் குறித்து விசாரித்தார். 

இந்நிகழ்வின் போது, நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொ.சங்கருடன் குன்னூர் ஆர்.டி.ஓ கீதாபிரியா, தாசில்தார் ஜான் மனோகர், குன்னூர் வருவாய் ஆய்வாளர் வசந்த் மற்றும் பலர் இருந்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...