எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர் மனமுடைந்து தற்கொலை


கோவை அருகே உள்ள இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் சௌந்தரராஜன் (28). அப்பகுதியில் உள்ள மில் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கு எச்ஐவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு கோவை அரசு பொது மருத்துவமனையில் சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த 4ம் தேதி முதல் அவர் காணாமல் போயுள்ளார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே ஞாயிறன்று சூலூர் அருகே உள்ள கல்லுக்குழியின் அருகே இவரது குடும்பத்தினர் தேடியுள்ளனர். அப்போது கல்லுக்குழியில் விழுந்து சௌந்தரராஜன் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சூலூர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...