மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நாளான இன்று...


கணவர் இறந்ததற்கான குடும்ப நிதி வழங்கக் கோரி முதாட்டி மனு

கோவை மாவட்டம், மதுக்கரை அடுத்த செட்டிபாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணம்மா (எ) ரமலத். இவர் திங்களன்று (இன்று) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள வட்டாட்சியர் பிரிவில் மனு அளித்தார். அம்மனுவில், கூறியிருப்பதாவது:-



என் கணவர் குன்னிமுகமது இறந்த பின் குடும்ப நிதிக்காக மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. ஆனால் அதனை என் கணவரது முதல் மனைவி கைப்பற்றிக்கொண்டார். எனக்குரிய பணம் வேண்டி பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளேன். தமிழக முதல்வரிடமும் மனு அளித்து அவர் எனக்கு சேர வேண்டிய நிதியை வழங்கக்கோரி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இதற்காக விண்ணப்பித்து வரும் எனக்கு தற்போது வரை எவ்வித நிதியும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், பல ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் வெளியில் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் முன்பு விழுந்து கண்ணம்மா தற்கொலையில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரை மீட்டு எச்சரிக்கை விடுத்து அனுப்பிவைத்தனர்.



பச்சிளங் குழந்தையுடன் மனு கொடுக்க வந்த பெண்மணி

குழந்தை பெற்று 50 நாட்களே ஆனா பெண்ணை சட்ட விரோதமாக சிறைபிடித்ததையும், கணவரை பொய் புகாரில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பச்சிளங் குழந்தை உடன் பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்துள்ளார். 



காந்திபார்க், ஆர்.எஸ் புரம் பகுதியில் வசித்து வருபவர் ஜோதிமணி இவருக்கு குழந்தை பிறந்து 50 நாட்கள் ஆகிறது. இவருடைய கணவர் விஷ்ணு ஜெயராம் இவரைத்தேடி, கடந்த 14.10.2016 அன்று கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் உள்ள மங்கையர்கரசி, பிந்து என்ற இரண்டு பெண் காவலர் விஷ்ணு ஜெயராம் எங்கே என கேட்டு அவரது மனைவியை மிரட்டி உள்ளதாகவும், மேலும் அவரை அவரது அக்கா வீட்டிலேயே சட்டவிரோதமாக 6 நாட்கள் சிறை பிடித்து வைத்ததாகவும், அன்னூரில் உள்ள இவரது வீட்டில் இருந்து டிவி, வாஷிங் மிசின் ஆகியவற்றை காவல்துறையினர் எடுத்து சென்றதாகவும் அந்த பெண்மணி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...