வயநாட்டில் குண்டு காயத்துடன் இறந்துகிடந்த காட்டு யானை

நீலகிரி, முதுமலை அடுத்த தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ளது வயநாடு. இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், சிறுத்தை என பல்வேறு உயிரினங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், அப்பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்துகிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற வனத்துறையினர் வயநாடுக்குட்பட்ட அதிரட்டுகுனி வயல் பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்துகிடப்பதை கண்டனர். தொடர்ந்து அதனை சோதனையிட்ட போது அதன் தலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருப்பதற்கான தடையம் தென்பட்டது.

இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து வனத்துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முன்னதாக, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வயநாடு அருகே வயல் பகுதியில் யானை நுழைந்து சேதப்படுத்தியதற்காக அதனைக்கொன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...