கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறையில் வேலைவாய்ப்பு

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறையில் வேலை வாய்ப்புக்கு வேலை அளிப்போர், வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.

இம்மாதத்திற்கான நிகழ்வு வரும் 11ம் தேதியன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த தனியார் நிறுவன வேலைவாய்ப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் படிக்காதவர்கள் முதல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, அனைத்து பட்டதாரி, ஐடிஐ உள்ளிட்ட படிப்பில் சான்றிதல் பெற்றவர்கள் மற்றும் டிப்ளமோ உள்ளிட்ட பிரிவிலும் கல்வித் தகுதி உடையவர்களுக்கு நேர்காணல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியின் மூலம் வேலை பெறும் மனுதாரர்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் மனுதாரர்கள் பெருமளவில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...