மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கோவையில் சிறப்பு பேட்டி!


சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கடைபிடிக்கப்படும் சில முறைகள் குறிப்பிட்ட சாரர்களுக்கு எதிரானது அல்ல எனவும், அந்த வழிமுறையை மீற அப்பகுதி பெண்களிடம் கருத்து கேட்க வேண்டுமெனவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் பாஜக சார்பில் மக்கள் சேவை மையம் இணையதளம் மற்றும் வேலை வாய்ப்பு பதிவு மையத்தை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், வழிபாட்டு உரிமை அனைவருக்கும் உண்டு என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது என தெரிவித்தார். ஆனால் சில வழிப்பாட்டு தளங்களில் கடைபிடிக்கப்படும் சில முறைகள் குறிப்பிட்ட சாரர்களுக்கு எதிரானது அல்ல எனவும், அனைத்து தரப்பு மக்களுக்கான வசதியாக இருக்க வேண்டுமென்ற வழிமுறை எனவும் அவர் தெரிவித்தார். மேலும் அந்த வழிமுறையை மீற அப்பகுதி பெண்களிடம் கருத்து கேட்க வேண்டுமென என கூறிய அவர், அப்படி கேட்கப்படாமல் கேரள அரசு திடீர் முடிவு எடுப்பது எந்த வகையில் பொருந்தும் என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது விரும்பதகாதது என கூறிய அவர், மாநில அரசுகள் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே விவசாயிகள் பிரச்சணைகளுக்கு தீர்வு காண முடியுமென தெரிவித்தார். 

பொது சிவில் சட்டம் மதம் சார்ந்த கருத்து அல்ல எனவும், அனைத்து பெண்களுக்கும் சகல உரிமைகளும் வழங்கப்பட வேண்டுமென்பதே பாஜகவின் நிலைப்பாடு என அவர் தெரிவித்தார். எல்லா துறைகளிலும் தோல்வியடைந்து மக்கள் செல்வாக்கை இழந்த கர்நாடக காங்கிரஸ் அரசு, காவிரி பிரச்சணையை அரசியலாக்கி இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சணை ஏற்பட்டு கர்நாடக அரசு கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தலை சந்தித்து ஆட்சி பிடிக்க முயல்வதாக பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...