கோவையில் கலைகட்டிய கூத்தாண்டவர் கோவில் திருவிழா- போக்குவரத்தில் மாற்றம்

திருநங்கைகளின் வாழ்வில் மிகவும் முக்கியமான நிகழ்வாக கருதப்படுவது கூத்தாண்டவர் கோவில் திருவிழா ஆகும். மகாபாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்காகக் போரில் ஈடுபட்டு பலி கொடுக்கப்பட்டவன் அரவான். அரவான் பலியாக்கப்பட்டதற்குப் பல விதமான கதைகள் மக்களிடையே சொல்லப்படுகின்றன. அதனடிப்படையில், உருவான கதையினையும், சம்பிரதாயத்தினையும் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் அரவானர்கள் கூடி திருவிழா நடத்தப்படுகிறது.

கூத்தாண்டவர் எனப்படும் அரவான் திருவிழாக்கள் தமிழகத்தில் பல்வேறு விதமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். கோவை மாவட்டத்தில், நீலிக்கோணாம்பாளையம் மாப்பிள்ளை ஊர் என்றும், அதனருகில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிங்காநல்லூர் மணப் பெண்ணின் ஊராகவும் கொண்டு இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது.



கடந்த வாரம் நீலிக்கோணாம்பாளையம் கோவிலில் இத்திருவிழா கம்பம் நடப்பட்டு தொடங்கப்பட்டது. இங்கே அமைக்கப்பட்டிருந்த தங்கமுகம் வைத்து அலங்கரிக்கப்பட்ட மணமகன் போன்ற அரவான், சிங்காநல்லூர் கொண்டுசெல்லப்பட்டது. அங்கு புதனன்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையடுத்து வியாழனன்று அரவானை அனுமானும், பொங்கியம்மாளும் தேடும் நிகழ்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இறுதி நிகழ்வான மகாபாரத கதையின் அடிப்படையில் கள பலி நிகழ்ச்சி வெள்ளியன்று (இன்று) நடைபெற உள்ளது. 

இதனைக்காண கோவை மாவட்டம் மட்டும் அல்லாமல் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் பல ஆயிரக் கணக்கானோர் சிங்காநல்லூரில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். 

இதனைத்தொடர்ந்து, மக்கள் கூட்டம் அப்பகுதியில் குவிவதால் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் போக்குவரத்து காவல் துறையினர் சாலை வழிகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். சிங்காநல்லூர் வழியாக வெள்ளலூர் செல்லும் அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டு வசந்தாமில் வழியாக கூத்தாண்டவர் கோவிலைச் சுற்றிச் செல்லப்படுகிறது. இராமநாதபுரம் வழியாக நஞ்சுண்டாபுரம் பாலம் சென்று அங்கிருந்தும் வெள்ளலூருக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. 



மேலும், பொதுமக்களின் கூட்ட நெரிசனைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதம் ஏற்படாதவாறும் திருவிழா நாட்களில் மாலை 5 மணி முதல் அப்பகுதியில் பலத்த காவல் துறை பாதுகாப்பு அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...