77-வது வார்டில் கொசு ஒழிப்பதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தெற்கு மண்டலம், 77-வது வார்டுக்குட்பட்ட சொக்கம்புதூர் பகுதியில் பொது மக்களுக்கு கொசு ஒழிப்பதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். 

இதைத்தொடர்ந்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்து தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளையும், சொக்கம்புதூர் மின் மயானத்தில் துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து தெற்கு மண்டலம், 86-வது வார்டுக்குட்பட்ட செல்வபுரத்தில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்நல மருத்துவமனையும், அங்குள்ள வரி செலுத்தும் மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், கோவை மாநகராட்சி 77, 79 ஆகிய வார்டுக்குட்பட்ட பொன்னையராஜபுரத்தில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் தங்கள் வருகை பதிவை டிஜிட்டல் மயமாக்கும் விதமாக பயோமெட்ரிக் பயன்படுத்தும் முறை செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதை ஆய்வு செய்யும் விதமாக 86-வது வார்டு, செல்வபுரம் நகர்நல மருத்துவ மையத்தில் பணிபுரியும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்துவதை க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார்.  

இதைத்தொடர்ந்து, மாநகராட்சியில் அனைத்து வரி செலுத்தும் இடங்களில் இன்று ஒரு நாள் மட்டும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செலுத்தி ரசீதுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்ததைத் தொடர்ந்து மேற்கு மண்டல அலுவலகத்திலுள்ள வரி செலுத்தும் மையத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின் போது துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் (பொ) ரவி, உதவி ஆணையர் (வருவாய்) ரவிக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...