குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியுடன் போஸ்ச் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழிநுட்ப கல்லூரியில் ஆட்டோமோடிவ் பொறியியல் துறை மாணவர்களுக்கு போஸ்ச் நிறுவனத்தின் ஆட்டோமோடிவ் எலக்ட்ரானிக்ஸ் மையம் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி மற்றும் போஸ்ச் நிறுவனமும் கையெழுத்திட்டனர்.
கல்லூரி முதல்வர் ஆர்.எஸ் குமார்  அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய கல்லூரி தலைவர் சங்கர் வானவராயர்; தொழிநுட்ப வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் உருவாகி வருகிறது. மாற்றங்களுக்கு ஏற்றவாறு மாணவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தொழிநுட்பத்தை பயன்படுத்தி அதற்கான தீர்வுகளை காண வேண்டும். அதற்கு ஏற்றவாறு, மாணவர்கள் தங்களின் வேலைவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ரோபார்ட் போஸ்ச் தலைமை மையத்தின் துணைத் தலைவர் ஸ்ரீராம், பொது மேலாளர் அனில் பிரகாஷ், இன்பினான் நிறுவனத்தின் ஆட்டோமோடிவ் டிவிசன் தலைமை அதிகாரி கிரிஷ் கமல், துறைத்தலைவர் வசந்தராஜ், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...