ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவன பேராசிரியர்களின் ஆராய்ச்சித் திட்டங்களை செயல்படுத்திய பல்கலைக் கழக மானியக் குழு

பல்கலைக் கழக மானியக்குழு (யுஜிசி), கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் 5 பேராசிரியர்களுக்கு ஆராய்ச்சி நிதி உதவியினை வழங்கி தாங்கள் சமர்ப்பித்த ஆராய்ச்சித் திட்டங்களை செயல்படுத்த உதவியுள்ளது.

கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்படும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மூன்று பேராசிரியர்கள் ஆர்.சௌந்திரராஜன், சுஜரிதா மற்றும் பிரபா ஆகியோர் மூன்று ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்பித்ததற்கு பல்கலைக் கழக மானியக் குழு ஒப்புதல் அளித்தது. மேலும் அந்த ஆராய்ச்சித் திட்டத்தை மேற்கொள்ள ரூபாய் 4 லட்சத்து 70 ஆயிரம், 2 லட்சம், 95 ஆயிரம் என முறையே வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அதே வளாகத்தில் செயல்பட்டு வரும் கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் பேராசிரியர் பிரசன்னாவிற்கு 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் ஆராய்ச்சி நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கோவைப்புதூரில் இயங்கி வரும் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் பொறியியல் துறை பேராசிரியர் சுந்தர்ராஜூக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஆராய்ச்சியினை தொடர பல்கலைக் கழக மானியக் குழு வழங்கியுள்ளது.

இக்கல்விக் குழுமங்களின் பேராசிரியர்கள் மொத்தம் 11 லட்சத்திற்கும் மேல் ஆராய்ச்சி நிதியினைப் பெற்று பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.

இவர்களை இக்கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, முதன்மை நிர்வாக அலுவலர் சுந்தரராமன், இக்கல்விக் குழுமங்களின் முதல்வர்கள் ஜே.ஜேனட், ஏ.ரமேஷ், பி.பாபாஞானகுமார், துறைத் தலைவர்கள் ஆசோக்வர்த்தன், ஜெகதீஸ்குமார், நடராஜன், சுமதி உட்பட பலர் வாழ்த்து தெரிவித்து ஆராய்ச்சியினை மேற்கொள்ள ஊக்கப்படுத்தினர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...