வாகன நிறுத்துமிடம், கட்டண கழிப்பிடத்தில் அதிக கட்டணம் வசூல்- அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை


கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட எம்டிபி ரோடு புதிய பேருந்து நிலையத்திலுள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்திலும், நவீன கட்டண கழிப்பிடத்திலும் அதிக கட்டணம் வசூல் செய்த குத்தைகைதாரர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், உதவி வருவாய் அலுவலர் மற்றும் சிறப்பு வரி ஆய்வாளர் ஆகியோர் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட எம்டிபி ரோடு புதிய பேருந்து நிலையத்திலுள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்திலும், நவீன கட்டண கழிப்பிடத்திலும் செப்டம்பர் 7 மற்றும் நவம்பர் 12 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, வாகன கட்டணம் விபரப் பெயர் பலகை வைக்கப்படாதது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பெயர் பலகை வைக்கும் படி அறிவுத்தப்பட்டது.

மேலும், நவ. 15 ம் தேதியன்று ஆய்வு செய்யப்பட்ட போதிலும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்திலும், நவீன கட்டண கழிப்பிடத்திலும் கட்டண பெயர் பலகை வைக்கப்படவில்லை. 

மேலும், அதிக கட்டணம் வசூல் செய்த இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன குத்தைகைதாரர் சாந்தகுமார் என்பவருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி அபராதமாக ரூ.20 ஆயிரம், நவீன கட்டண கழிப்பிடத்தின் குத்தைகைதாரர் ஜமேஷா என்பவருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், இது போன்ற தவறுகள் தொடரப்பட்டால் குத்தகைதாரர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அவர்களுடைய பெயர்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பதுடன், செலுத்திய தொகைகள் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி நிதியில் சேர்க்கப்பட்டும் என்றும் அந்த இடத்தின பொது மின் ஏலத்தில் விடப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Newsletter

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...