தவறான சிகிச்சையால் கல்லூரி உதவி பேராசிரியர் உயிரிழப்பு ?


நீலகிரி மாவட்டம், குயில்ஹில் பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி வைலட். இவர்களது இளைய மகள் அருள்மொழி மற்றும் மூத்த மகள் கவிதா (24). 

கவிதா சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கல்லூரி விடுமுறைக்காக நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு காய்ச்சல் ஏற்படவே பாலு, குன்னூரியில் செயல்படும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கவிதாவுக்கு மருந்து கொடுத்துள்ளனர். வீட்டிற்கு வந்த கவிதா மருந்தினை உட்கொண்ட சில நிமிடங்களிலேயே உடல் முழுவதும் அழற்சி ஏற்பட்டு, கை, கால்கள் கருப்பு நிறத்தில் மாறியுள்ளது. மீண்டும், அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும் அழற்சி அதிகரித்துள்ளது.

இதைத்தொடர்ந்து கவிதா, கோவையில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் வியாழனன்று உடல் நிலை மிகவும் மோசமடைந்து பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து, அவரது பெற்றோர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவலர்கள் குன்னூர் தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...