'ஆண்டி, அங்கிள்-ஐ விடுத்து குழந்தைகளுக்கு தமிழ் வழியில் உறவு முறைகளை கற்றுக்கொடுங்கள்' - தமிழ் ஆர்வலர், தமிழ்வாணன் பேட்டி


நடை, உடை மற்றும் நாகரீகத்தில் மேற்கத்திய பழக்கவழக்கங்கள் நம் தேசத்தவரை தொற்றிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் நமது உறவு முறைகளுக்குள் உள்ள நெருக்கங்களும், உணர்வுகளும் மொழியை அடிப்படையாகக் கொண்டு தளர்ந்து வருகின்றன. அவ்வாறு மொழியால் உணர்வின்றி விடப்பட்ட உறவு முறைகளே மாமா மற்றும் அத்தை என்ற சொந்தங்கள். ஒவ்வொரு முறையும் சொந்த பந்தங்களை தக்க உறவு முறை சொல்லி அழைக்கும் போதும் அந்த உறவுகள் உயிரோட்டம் பெறுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. 

ஆனால், இன்றைய தலைமுறையினர் மாமா மற்றும் அத்தை போன்ற சொந்தங்களை அழைக்க ஆங்கிலத்தில் அங்கிள், ஆண்டி என்ற வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் இந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் தெரியாமலேயே அதை உபயோகப்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து தமிழ் ஆர்வலரும், இயற்கை ஆர்வலருமான தமிழ்வாணன் கூறியதாவது :-







ஒவ்வொரு துறையிலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனப்பாண்மை மக்களிடையே அதிகரித்துள்ளது. மேலும், ஆங்கிலம் கற்றால் தான் பணம் சம்பாதிக்க முடியும் என்ற எண்ணம் மக்கள் மனதில் மிக ஆழமாக வேரூன்றிவிட்டது. அதன் விளைவாக பெரும்பாலான குழந்தைகள் இன்று அனைத்து பாடங்களையும் ஆங்கில வழியிலேயே கற்கின்றனர். மண் என்பது நம்மை தாங்கக்கூடிய தாய், பேசும் மொழி என்பது ஒரு இனத்தின் விழி போன்றது. 

இந்த இரண்டையும் தமிழன் மறந்து பல ஆண்டுகள் கடந்து விட்டன. அதனால் தான் நம் மக்கள், மண் கொள்ளை குறித்தும் மொழி அழிவு குறித்தும் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். எப்போது வேற்று மொழியில் உறவு முறைகள் அழைக்கப்பட ஆரம்பித்ததோ அன்று மொழியின் அழிவு தொடங்கிவிட்டது.

ஆங்கில மயக்கம்

குழந்தைகள் தங்கள் உறவினர்களை ஆண்டி, அங்கிள் என்று அழைப்பதை பெற்றோர் பெருமையாக நினைக்கின்றனர். இது பெருமைப்பட வேண்டிய நிகழ்வு அல்ல. மிக எளிமையானது தான்,  இது குறித்த அறிவு படைத்தவர்கள் பிறருக்கு  உணர்த்த வேண்டும். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை கற்றுக்கொடுக்கும் படி பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை நிர்பந்தித்து வருகின்றனர். அவ்வாறு, குழந்தைகள் ஆங்கிலம் பேசவில்லை என்றால், பள்ளி நிர்வாகத்தை குறை கூறுவது வழக்கமாகி வருகிறது. ஆங்கிலம் மொழியை படிக்க வேண்டாம் என்று கூறவில்லை. அந்த மொழியை கற்றுக்கொள்ளுங்கள், தமிழ் மொழியை பயன்படுத்துங்கள். மொழியை சரியாக பயன்படுத்தாமல், மொழியை புரிந்து கொள்ளாமல் இருப்பது தான்  இன்றைய மண முறிவுகளுக்கு முக்கிய காரணம். தாய் மொழி உரையாடல்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள உதவும்.

ஆண்டி/அங்கிள் ?

ஆண்டி, அங்கிள் என்ற ஆங்கில வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தம் சித்தப்பா, சித்தி என்பதாகும். உறவினர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் போன்ற அனைவரையும் குழைந்தைகள் ஆண்டி, அங்கிள் என்றே அழைக்கின்றனர். எப்படி 10 உறவுமுறைகளும் ஒரே வார்த்தையில் அடங்கும்? இன்றைய கால கட்டத்தில் அவ்வாறு அழைக்க நிர்பந்திக்கும் பெற்றோர்களுக்கே, ஆண்டி, அங்கிள் என்ற வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தம் தெரியாது. மேலும், அனைத்து உறவுமுறைகளையும் சுருக்கி இப்படி ஓரிரு வார்த்தைகளுக்குள் அடக்கிவிட்டால் சொற்பெருக்கம் குறைந்து போகும். அவ்வாறு, சொற்பெருக்கம் குறைந்து போகும் போது அறிவு விரிவடையாது. பெற்றோர்கள் இதை உணர்ந்து குழந்தைகளுக்கு சரியான உறவு முறையை தாய் மொழியில் தெரியப்படுத்த வேண்டும். தொடர்ந்து, அவர்களை தமிழில் உறவு முறை கூறி அழைக்க பழக்க வேண்டும்.

பள்ளியில் அபராதம் 

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், ஆங்கிலம் தெரிந்தால் அரசு வேலை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை அந்த எண்ணமே மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இதை பயன்படுத்திக் கொண்ட சில தனியார் அமைப்புகள், ஆங்கில வழி கல்விதான் சிறந்தது என்று கூறி பள்ளிகளை நிறுவி பெற்றோர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். சில பள்ளிகளில், தமிழில் பேசும் குழந்தைகளுக்கு அபராதம் விதிப்பதாக தெரிகிறது. ஆனால், பள்ளி முடிந்து வெளியே வரும் குழந்தைகள் பூட்டி வைத்த அழகு தமிழில் தான் பேசுகின்றனர். பெற்றோர் நிர்பந்தங்கள் குறையும் போது, பள்ளி நிர்வாகங்களும் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளும்'' இவ்வாறு அவர் கூறினார்.

சொந்த பந்தங்களை தாய் மொழியில் சரியான உறவு முறை கூறி அழைப்பதே பெருமை. இன்றைய கால கட்டத்தில் ஆங்கிலம் பேசுபவர்கள் தான் அறிவாளிகள் என்ற தவறான கருத்து மக்களிடையே பரவியுள்ளது. இதன் வெளிப்பாடுதான், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு வேற்று மொழியில் உறவுகளை சொல்லிக்கொடுப்பதற்கான முக்கிய காரணம். ஆங்கிலம் என்பது அறிவு அல்ல. அதுவும் ஒரு மொழி என்பதை பெற்றோர்கள் உணரவேண்டும். வரும் காலத்தில் உறவுகள் தளர்ந்து போகாமல் இருக்க அவரவர் தாய் மொழியில் குழந்தைகளுக்கு உறவுகளை கற்றுக்கொடுங்கள்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...