பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல்; இந்திய வீரர் ஒருவர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பாக்., ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ஜவான் ஒருவர் பலியானார்; 3 வீரர்கள் காயமடைந்தனர். எல்லையில் பதற்றம் யூரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்திய எல்லைப்பகுதிகள் முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், இந்தியா நடத்திய 'சர்ஜிகல் ஸ்ட்ரைக்' தாக்குதலில் பாக்., பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து எல்லையில் பதட்டம் நிலவி வருகிறது. பி.எஸ்.எப்., ஜவான் இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி செக்டரில் பாக்., ராணுவம் இன்று அத்துமீறி தாக்கியதில் இந்திய எல்லைப் பாதுகாப்புபடை தலைமைக் காவலர் ராய்சிங் பலியானார்.

மேலும் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்த 24 மணி நேரத்தில் இந்திய எல்லையில் பாக்., ராணுவம் 3 முறை அத்துமீறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...