மாநகராட்சியுடன் இணைந்து சிஎம்எஸ் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட இராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள்


இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர் அமைப்புகள் கோவை மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியாளர்கள் வசிக்கும் கோவை சிஎம்எஸ் பகுதியில் புதனன்று துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.



இதுகுறித்து, இப்பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் நமது நிருபரிடம் கூறுகையில்,



இங்கு சுமார் 450-க்கும் மேற்பட்ட குடும்பங்களாக நாங்கள் வசித்து வருகிறோம். கல்லூரி மாணவர்கள் இப்பகுதிக்கு வந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டதால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளோம். மாணவர்களின் இச்செயல் எங்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பணி முடிந்தவுடன் தொடர்ந்து இதேப்போன்று சுத்தமாக வைக்க நாங்கள் பணியாற்றுவோம்'' என்றார்.





தூய்மை பணி காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது. இதற்கான அனைத்து உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் கோவை மாநகராட்சியின் சார்பில் வழங்கப்பட்டது. மாணவர்களும், தன்னார்வலர்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை தவிர்ப்பது குறித்தும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.



கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகரமைப்பு திட்ட துணை அலுவலர் ஹேமலதா, மண்டல துப்புரவு அலுவலர் குணசேகரன், ஸ்வச் பாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமால்  ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இப்பணி நடைபெற்றது.





Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...