குழந்தைகளுக்கான மாற்று பராமரிப்பு முறைக்கான இரண்டுநாள் கருத்தரங்கு நிகழ்ச்சி


தமிழ்நாடு இந்தியன் கவுன்சில் குழந்தைகள் நல அமைப்பு மற்றும் சென்னை ஐக்கிய நாடு சிறுவர் நிதியம் இணைந்து குழந்தைகளுக்கான மாற்று பராமரிப்பு முறைக்கான இரண்டுநாள் கருத்தரங்கு நிகழ்ச்சி ஆர்.எஸ். புரம் ஸ்ரீ அன்னபூர்ணா கலையரங்கத்தில் இன்று துவங்கியது. 



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். தமிழ்நாடு இந்தியன் கவுன்சில் குழந்தைகள் நல அமைப்பு துணைத் தலைவர்கள் சந்திராதேவி வரவேற்புரை வழங்கினார், நிர்மலா தலைமையுரை வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் பராமரிப்பு, தத்தெடுப்பு போன்றவவை குறித்து கலந்துரையாடப்பட்டது. இதில் குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள், குழந்தை நல குழுவினர், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு இந்தியன் கவுன்சில் குழந்தைகள் நல அமைப்பு பொது செயலாளர் கிரிஜா குமார்பாபு, கோவை அமிர்தா பல்கலைக்கழகம் பேராசிரியர் சுஜா, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...