கோவையில் திமுகவினர் 1000 ரூபாய் நோட்டின் மாதிரியை பாடை கட்டி ஆர்ப்பாட்டம்!

கோவையில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் நடத்தப்பட்ட மனித சங்கிலி போராட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது திமுகவினர் 1000 ரூபாய் நோட்டின் மாதிரியை பாடை கட்டி எடுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.இந்த அறிவிப்பினால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டதுடன், பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு மக்கள் அலைந்து திரியவேண்டி இருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கத்தினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஓரு பகுதியாக தி.மு.க சார்பில் இன்று மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகின்றது. கோவையில் நஞ்சப்பா சாலையில் துவங்கி கிராஸ்கட் வீதி வரை திமுகவினர் திரண்டு நின்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மாநகர் முழுதும் இருந்து திமுகவினர் கலந்து கொண்டனர். அப்போது பேட்டியளித்த பொங்கலூர் பழனிச்சாமி, மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் பொதுமக்களும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் 500 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய் அதிகளவு புழக்கதில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர், 1000 ரூபாய் நோட்டின் மாதிரி ஒன்றை பாடையில் கட்டி எடுத்து வந்து சங்கு ஊதியும், மேளம் முழங்கவும் ஒப்பாரி வைத்தனர். இதனால் போராட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



Newsletter

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...