தவறான சிகிச்சை அளித்ததால் ஜோதிடர் உயிரிழந்தாக கூறி உறவினர்கள் சாலை மறியல்


தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் ஜோதிடர்  உயிரிழந்ததை அடுத்து உரிய விளக்கம் அளிக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிடர்  குமார். மனைவி கஸ்தூரி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். குமாருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்ததை அடுத்து கோவை அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச் எனப்படும் கோவை மெடிக்கல் சென்டர்  மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.



இந்நிலையில் கடந்த சில நாட்களாக குமாருக்கு பகலில் பார்வை குறைபாடு எற்பட்டதால் அவர் தனியார் கண் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 3 வருடங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையால் இந்த பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் மீண்டும் அதே மருத்துவமனைக்கு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து, குமார் கே.எம்.சி.எச். சென்ற போது அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த புதன்கிழமை அன்று குமாருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த குமாரை சந்திக்க மருத்துவர்கள் அனுமதிக்காத நிலையில் இன்று மதியம் அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அறுவை சிகிச்சை முழு பலனளிக்காததால் குமார் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் உரிய விளக்கம் அளிக்க கோரி அவினாசி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர் . குமார் இறந்ததற்கான உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ஆதரவற்ற நிலையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...