500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற கால அவகாசம் கோரி த.மா.கா-வினர் ஆர்ப்பாட்டம்

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த 8ம் தேதியன்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அந்த ரூபாய்  நோட்டுக்களை மாற்றிக் கொள்ள டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு முன்பு சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் வங்கிகளில் போதுமான பணம் இல்லாத சூழல் நிலவி வருகிறது. இதனால், அன்றாடம் பொதுமக்கள் தங்களது பணியையும் விட்டுவிட்டு வங்கியிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும், நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என்பதால் பொதுமக்கள் மத்தியில் பெருத்த சிரமங்கள் நிலவி வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மத்திய அரசு இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்றும், பணத்தை மாற்ற தவிக்கும் மக்களுக்கு உரிய நேரத்தில் பணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...