காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள ஏடிஎம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது

500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் இந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதிலும், புதிய ரூபாயினை பெருவதிலும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக புதிய ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதிலும் தாமதம் நிலவி வருகிறது. வங்கிகளிலும் நாள் ஒன்றுக்கு அதிகப்படியாக 2000 ரூபாய் மட்டுமே பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கியிலும், ஏடிஎம் இயந்திரங்களிலும் போதிய பணம் இல்லாததால் மக்கள் அன்றாட செலவுகளுக்கு கூட பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, கோவை மாநகர காவல் துறை ஆணையத்தில் காவலர்கள் பயன்பாட்டிற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காவல் துறை ஆணையர் ஏ.அமல்ராஜ் தற்போது அனுமதி வழங்கியுள்ளார்.

கோவை மாநகர காவல் துறை ஆணையரின் இந்த மனிதநேயமிக்க அறிவிப்பு பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும், அவரது இந்த சமூகத்தின் மீதான அக்கரைக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...