500, 1000 ரூபாய் நோட்டு தடையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலினை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததைக் கண்டித்து திங்களன்று (இன்று) நாடு தழுவிய அளவில் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டன. இதனிடையே, சென்னை நுங்கம்பாக்கத்தில் திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், திமுக பொருளாளர் ஸ்டாலினை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து கோவை அரசு பொது மருத்துவமனை முன்பு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது.









இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி உட்பட பலரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...