கோவையில் அரசு உத்தரவுப்படி மூடப்பட்ட பள்ளிகள் தற்போது அனுமதியின்றி செயல்படுவதாக ஆம் ஆத்மி கட்சியினர் புகார்

கோவை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பல்வேறு தனியார் பள்ளிகள் அரசின் முறையான அனுமதி பெறாமல் செயல்படுவதாகவும், அவ்வாறு செயல்படும் பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டும் தற்போது எவ்வித உத்தரவுமின்றி செயல்படுவதாகவும் கூறி கோவை மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ரஃபி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

அனுமதி பெறாததாலும், முறையான கட்டமைப்பு இல்லாததாலும், முறைப்படி அனுமதியினை புதுப்பிக்காததாலும் தமிழக அரசு உத்தரவுப்படி அன்றைய கோவை மாவட்ட ஆட்சியராக செயல்பட்ட கருணாகரன் பல பள்ளிகளை மூட உத்தரவிட்டார். 

இருப்பினும் தற்போது அந்த பள்ளிகள் எவ்வித அனுமதியும் இன்றி செயல்பட்டு வருகிறது. இது மாவட்டக் கல்வித் துறைக்கு தெரிந்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. பெற்றோர்களும் இதுகுறித்து அறியாமல் தங்களது குழுந்தைகளை அந்த பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். பள்ளி நிர்வாகம் ஆயிரக்கணக்கான ரூபாயினை பெற்றோர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு முறைப்படி அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது.

எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொண்டு அனுமதி புதுப்பித்தல், ஆய்வகம், கழிப்பறை, சுற்றுச் சுவர் போன்ற அடிப்படை வசதிகள் முறைப்படி உள்ளனவா ? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

அனுமதி பெற்ற பள்ளிகள் தங்களது அங்கீகாரம் பற்றிய அனுமதிக் கடிதத்தை தகவல் பலகையில் பெற்றோர்களுக்கு தெரியும் வகையில் அமைக்க வேண்டும்.

கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் பல பள்ளிகளில் இட ஒதுக்கீடுகள்  செய்யப்படுவதில்லை. அதனை ஆய்வு செய்து இடஒதுக்கீட்டினை உறுதிசெய்ய வேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமிராவினை பொருத்த காட்டாயப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

Newsletter

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...