ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள வணிக முடக்கத்தை மத்திய அரசு தீர்க்கக் கோரி தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம்


500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம் தேதியன்று இரவு பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால், தற்போது தமிழகத்தில் வணிகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.





அதன்படி கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் கோவை மண்டலத் தலைவர் டி.ஆர்.சந்திரசேகரன் முன்னிலையில், நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் தற்போது புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டுமே  வெளியிடப்பட்டுள்ளது. உடனடியாக புதிய 500 ரூபாய் நோட்டினை அதிகளவில் மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும்.

வணிகர்கள் மற்றம் தொழில் முனைவோருக்கு நடப்புக் கணக்கில் வாரம் ஒருமுறை ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற வரம்பை உயர்த்தி 2 லட்சம் ரூபாய் வரையிலும் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் சிறிய, நடுத்தர வணிகர்கள் வாரத்திற்கு ரூ.50 ஆயிரம் இருப்பில் இருந்து எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். விவசாயிகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி தேவைக்கேற்ப வங்கிகள் மூலமும், ஏடிஎம் இயந்திரம் மூலமும் பணம் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...