கோவை பந்தய சாலை பூங்காவில் குற்றங்கள் நடைபெற உதவும் சாதாரண மின்விளக்குகள்

கோவை நகரை அலங்கரிக்க பல பூங்காக்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் இந்த பந்தய சாலை பூங்கா. இப்பூங்கா 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது, இங்கு காலை மற்றும் மாலை நேரத்தில் பொது மக்கள் நடைபயணம் மேற்கொள்ளுகின்றனர். சிறுவர்களுக்கான விளையாட்டுப் பூங்கா, இளைஞர்களுக்கான இலவச உடற்பயிற்சி மையம் மற்றும் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் அமைதி பெறுவதற்கான இயற்கை சூழலுடன் கூடிய இருப்பிடங்கள் உள்ளது. மேலும், இப்பூங்காவை சுற்றி வீடுகள், அரசு அதிகாரிகள் தங்குவதற்கான குவாட்டர்ஸ், கல்லூரிகள் மற்றும்  பல்வேறு நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. அதனால் பொதுமக்கள் அதிகம் பேர் தினமும் இங்கு வந்தும் செல்கின்றனர். 



தற்போது, இப்பகுதியில் இலவச வை-பை வசதிகள் உள்ளதால், கல்லூரி மாணவர்கள், இப்பகுதியில் செல்வபவர்கள், ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் என அனைவரும்  இப்பூங்காவிற்கு நேரத்தை ஒதுக்கிவிட்டு செல்கின்றனர். எனவே, இப்பூங்காவிற்கு ஓய்வே இல்லை என்றே சொல்லலாம். இதனை தன்னார்வ அமைப்புகளும், கோவை மாநகராட்சியும் பராமாரித்து வருகின்றனர்.

அழகிய முறையில் பல்வேறு பணிகள் பந்தய சாலை பூங்காவில் நடைபெற்றாலும், இரவு நேரங்களில் பொதுமக்களுக்கும் அச்சுறுத்தும் வகையில் தான் இப்பூங்கா உள்ளது. 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பந்தய சாலை பூங்காவில், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் நடைபாதையின் இருபுறத்திலும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது அந்த மின்விளக்கு உபயோகத்தில் உள்ளதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

பந்தய சாலை பூங்காவில் உள்ள மின்விளக்குகள் பல சரியாக எரிவதில்லை. இதனால், மாலை நேரங்களில் நடைபயிற்ச்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல், இரவு நேரங்களில் இப்பகுதிகளில் பல்வேறு திருட்டுக்கள் நடைபெறுவதாகவும் கூறுகின்றனர்.

மேலும், நாம் அனைவரும் அறிந்த விஷயம் சந்தன மரங்கள் வெட்டுதல் போன்றவையும் இரவு நேரங்களில் தான் நடக்கின்றது.

 

சமீபத்தில், கடந்த மாதம் இப்பகுதியில் 20 வருட பழமையான சந்தன மரத்தை வெட்டி கடத்திச் சென்ற சம்பவம் குறித்து பந்தய சாலை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதியை சுற்றிலும் ஏராளமான சந்தன மரங்கள் உள்ளன. மேலும் பந்தய சாலை காவல் நிலையத்துக்கு பின் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பகுதியிலும் சந்தன மரம் வெட்டப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எனவே, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு சிறிய காரணமாக இருப்பது, சாதாரண மின்விளக்கு போன்ற விஷயங்களே இது போன்ற குற்றங்களை தடுக்க கோவை மாநகராட்சி காவல்துறையினர், மாநகராட்சி அலுவலர்கள் ஆரம்பத்திலே முலையை வேரோடு கிள்ளி எறிய வேண்டும்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...