நியூ இந்தியா அசுரன்ஸ் கோ லிமிடெட் நிறுவனத்தின் வெள்ளிவிழா

கோவை: ஆர்.எஸ் புரத்தில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணா கலையரங்கில் இன்று இந்தியாவின் முதன்மை பொது காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அசுரன்ஸ் கோ லிமிடெட் நிறுவனத்தின் கோவை மண்டல அலுவலகத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். 



பின்னர், அவர் பேசுகையில்:-
கோவை மண்டல அலுவலகம் 1991ம் ஆண்டு 25 கோடியில் பிரீமியம் துவங்கப்பட்டு 2001ம் ஆண்டில் 100 கோடியை தாண்டியது. 2015-16ம் ஆண்டில் மதுரை, கோவை மண்டலம் சேர்ந்து 557 கோடி பிரீமியத்தை எட்டியது. மேலும் 2016-17ம் ஆண்டில் 710 கோடி பிரீமியத்தை அடைய திட்டமிட்டுள்ளது. கோவை மண்டல அலுவலகம் இன்று கோட்ட அலுவலகங்கள், கிளை அலுவலகங்கள் என 77 அலுவலகங்களை கொண்டுள்ளது. மேலும் 100 அலுவலகங்கள் விரைவில் அடையும் என நம்பிக்கை உள்ளது. இந்திய மற்றும் உலகளவில் மாபெறும் சாதனைகளை செய்து மிகவும் சக்திவாய்ந்த காப்பீட்டு நிறுவனமாக திகழ்கிறது. இந்தியாவில் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களில் முன்னோடியாக இன்று திகழ்கிறது. 

இந்தியாவில், பொது காப்பீட்டு திட்டம் வேகமாக வளர்ந்து வருகிறது. சென்ற ஆண்டு 97 ஆராயிரம் கோடியாக, இருந்த பிரீமியம் இந்த ஆண்டு 1 லட்சத்து 20 ஆயிரம் வரை வளர்ந்துள்ளது. இது தொடர்ந்து வளர்ந்து 2025ம் ஆண்டில் 5 லட்சம் கோடி வரை எட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. 2025ல் நியூ இந்தியா அசுரன்ஸ் 1 லட்சம் கோடி ரூபாய் பிரீமியம் எட்டும் என நம்புகிறேன். இன்று பொது காப்பீட்டு துறை பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. அந்நிய முதலீட்டில் 26 சதவீதம் முதல் 49 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. பல புதிய நெறிமுறைகளை கையாளும் நிலையை கொண்டுள்ளது. பல்வேறு புதிய நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றன. மிகவும் சீறிய முறையில் வாடிக்கையாளர்களுக்கு  சேவை செய்தால் மட்டுமே நாம் தொடர்ந்து காப்பீட்டு நிறுவனம் செயல்படுத்த முடியும் என அவர் கூறினார்.



பின்னர், நியூ இந்தியா அசுரன்ஸ் கோ லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ஆண்டு மலரை அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் வெளியிட்டார். அதன்பின் நியூ இந்தியா அசுரன்ஸ் கோ லிமிடெட் நிறுவனத்தின் அவிநாசி புதிய கிளையின் அடிக்கல்நாட்டு பலகையை திறந்து வைத்தார்.









இதில், அந்நிறுவனத்தின் பொது மேலாளர் நரம்புநாதன், துணை பொது மேலாளர் ஆதியப்பன், மண்டல மேலாளர் பிரபாகர ராவ் மற்றும் அந்நிறுவனத்தின் அலுவலர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...