கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் பெண் காவல்துறையினருக்கு இலவச மருத்துவ முகாம்

கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் இலவச விழிப்புணர்வு முகாம் கோவை காவலர் பயிற்சிப் பள்ளி அரங்கத்தில் இன்று நடைபெற்றது. முகாமினை கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் துவங்கி வைத்தார். 


பின்னர், அவர் பேசுகையில்:-
பெண்கள் பலர் தங்களது உடல் ஆரோக்கியத்தை பற்றி கண்டுகொள்வதில்லை. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடப்பதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பு வராமல் தடுக்க முடியும். இன்றைய தொழில்நுட்பத்தின் மூலம் 100 சதவீதம் வரை பல்வேறு வகையான புற்றுநோய்களை குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், கிராமப்புறத்தில் உள்ள பெண்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கே.எம்.சி.எச் மருத்துவமனை நடத்துகிறது. 



இன்று கே.எம்.சி.எச் மருத்துவமனை நடத்தும் இம்முகாமில் கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் உள்ள பெண் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் அதுமட்டுமல்லாமல், இந்த விழிப்புணர்வு பற்றி உங்களுக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கவேண்டும் எனக் கூறினார்.  

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...