மகனிடம் தாயை சேர்த்த ஈர நெஞ்சம் !


கடந்த ஏப்ரல் 4ம் தேதி ஆந்திராவில் இருந்து கோவை நோக்கி வந்த ரயிலில் இருந்து இறங்கியவர் சுப்பம்மாள். ஆந்திர மாநிலம் பொன்னூர் பகுதியை சேர்ந்த இந்த மூதாட்டி, ரயில் பிரயாணத்தின்போது தவறுதலாக குடும்பத்தினரை பிரிந்து கோவை வந்தார். புரியாத மொழி, புதுப்புது மனிதர்கள், கூட்ட நெரிசல் என்று விழி பிதுங்கி நின்றார் சுப்பம்மாள். இது குறித்து தகவலறிந்த, கோவை ஈர நெஞ்சம் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் ரயில் நிலையம் சென்று அந்த மூதாட்டியை மீட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஈர நெஞ்சம் அறக்கட்டளைக்கு அழைத்துச் சென்றனர். 



தொடர்ந்து சுப்பம்மாளிடம் பேசி அவர் ஊர், பெயரை பெற்ற ஈர நெஞ்சம் மகேந்திரன், சுப்பம்மாளின் குடும்பத்தினர் குறித்த விவரங்களை சேகரித்தார்.முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சுப்பம்மாளின் புகைப்படத்துடன் அவர் தற்போது இருக்கும் முகவரியை சேர்த்து பதிவு செய்தார். 

இந்த தகவல் ஹைதராபாத்தில் உள்ள சுப்பம்மாளின் மகன் ராமாராவ் என்பவருக்கு கிடைக்கவே, இன்று கோவை வந்த அவர் ஈர நெஞ்சம் அறக்கட்டளையில் தங்கியிருந்த தாயை சந்தித்தார். மகன் வந்ததையறிந்த சுப்பம்மாள் ராமாராவை கட்டி அழுத காட்சி காண்பவர்  நெஞ்சை கசிய வைத்தது. தொடர்ந்து இன்று சுப்பம்மாள் தனது மகனுடன் ஆந்திரா சென்றார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...