மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்உறுப்பு தானம் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு

சேலம் மாவட்டம், தாதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம்(28), தந்தை கந்தசாமி – விவசாயி மற்றும் தாயார் சரோஜா அவர்களுடன் வசித்து வந்தார். வெங்கடாசலம் கடந்த 7-ம் தேதி காலை 11 மணியளவில் திருப்பூரில் உள்ள அவர் வேலை செய்யும் பனியன் கம்பெனியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பெருந்துறை மெயின் ரோடு அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்து கொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் வெங்கடாசலம் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் இவர் வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணியவில்லை. உடனடியாக அவர் ஈரோடு கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் 7-ம் தேதி மாலை 5.00 மணியளவில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக கே.எம்.சி.எச் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்களும் உறுதி செய்தனர்.

அதனை தொடர்ந்து, தாதாபுரம் பஞ்சாயத்து தலைவர் அரசி மாதையன் அறிவுரையின்படி, வெங்கடாசலம் குடும்பத்தார், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதன்படி அவரது உடல் உறுப்புகள் தானம் செய்ய கோவையிலுள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு 08.12.16-ம் தேதியன்று கொண்டுவரப்பட்டது.இதன்படி வெங்கடாசலம் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, கல்லீரல் மற்றும் இரு சிறுநீரகங்கள் கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கும், கண்கள் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையின் தலைவர் நல்ல பழனிச்சாமி கூறுகையில்; மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். உடல் உறுப்பு தானம் வழங்கிய வெங்கடாசலம் குடும்பத்தாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...