இடமாற்றம் செய்யப்படும் தனியார் நிறுவனத்தை கண்டித்து தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முற்றுகை


கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் டைமேக்ஸ்சன் டைமண்ட் செயற்கை வைரம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு பெரியநாய்க்கன்பாளையம் பகுதியில் 2 தொழிற்சாலைகளும் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் ஒன்றும் உள்ளது.

இதில், கண்ணம்பாளையத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் 300-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், அந்த தொழிற்சாலை ஊழியர்கள் இனி பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் பணிபுரியுமாறு ஆலை நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் ஆலை நிர்வாகத்திடம் இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதால் இடமாற்றம் செய்யப்பட்டால் பணிபுரியும் அனைத்து குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும், 30 முதல் 35 கிலோ மீட்டர் தூரம் அதிக பயணம் செய்ய வேண்டிய கட்டாய நிலமையினை நிர்வாகம் உருவாக்குவதாகக் கூறி தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ஆலை நிர்வாகத்தினரை தொழிலாளர் நல அலுவலகம் அழைத்து இப்பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...