தமிழக அரசின் பல்வேறு பிரிவில் பணிபுரிவோர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவக்கம்




கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள அரசு அலுவலர் அடிப்படை சிறப்பு பயிற்சி மையத்தில் இன்று அரசு அலுவலர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கி வைத்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் கீழ் பவானிசாகரில் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் 1974ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமணம் செய்யப்படும் இளநிலை உதவியாளர்கள், நேரடி உதவியாளர்கள், தட்டச்சர் பணியிலிருந்து பதவி உயர்வு பெற்று உதவியாளர்களாக பணிபுரிபவர்கள், கருணை அடிப்படையில் நியமனம் பெறும் இளநிலை உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியிலிருந்து பதவி உயர்வு பெற்று இளநிலை உதவியாளர்களாக பணிபுரிபவர்கள் என அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தற்சமயம், தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் புதிய நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதால், அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பதால் ஏற்படும் காலதாமதத்தினை கருத்தில் கொண்டு தற்போதைய நிலையில் 9723 அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 

கோவை பயிற்சி மையமானது பெண்களுக்கான சிறப்பு பயிற்சி மையமாகும், இப்பயிற்சி வகுப்புகள் 8 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து 243 அலுவலர்கள் கொண்ட முதல் அணிக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கி தொடர்ந்து 37 நாட்கள் என வரும் டிசம்பர் 2017 ஜனவரி 28ம் தேதியன்று நிறைவடையும். அடுத்தடுத்த அணிகளுக்கு இவ்வகுப்புகள் தொடர்ந்து ஜனவரி 2018 வரையில் நடைபெறும். 

இவ்வகுப்பில் அலுவலக நடைமுறை, பணி நடைமுறை, பொது மக்கள் தொடர்பு, ஊரக வளர்ச்சி, கணக்குகள் ஆகிய பாடதிட்டங்களின் கீழ் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இவ்வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தங்குமிட வசதி மற்றும் அடிப்படை வசதிகள், உணவு உள்ளிட்டவைகளும் போதிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவ்வகுப்பினால் பணி குறித்த பயிற்சி பெறுவதோடு மட்டுமல்லாமல், உடலளவில் மேம்படும் வகையிலான உடற்பயிற்சி வகுப்புகளும், உள்ளத்தினால் மேம்பட இறைவணக்கம் மற்றும் யோகா வகுப்புகளும் நடைபெறுகிறது. கடந்த முறை 2014 முதல் 2016 வரை நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பில் 8 அணிகள் மூலம் 1650 பெண் பணியாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இப்பயிற்சி வகுப்பினை அனைவரும் சிறந்த முறையில் கற்று தங்களது பணித்திறன்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும்'' என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர் அடிப்படை சிறப்பு பயிற்சி மைய முதல்வர் மு.பாலச்சந்திரன், விரிவுரையாளர்கள் மு.சாமியப்பன், நரசிம்மன், கண்கானிப்பாளர் தங்கவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் பேரூர் தாலுகாவில் தொடக்கம்

கோவை பேரூர் தாலுகா தென்கரை பஞ்சாயத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் 600க...

கோவை செம்மொழிப் பூங்காவில் மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல செம்மொழிப் பூங்காவில் மேயர் K. ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ரோஜாத் தோட்டம்,...

Driving Licences, RCs to Go Digital: Coimbatore Contract Workers Seek Alternative Jobs in Transport Dept

Following Tamil Nadu’s announcement that driving licences and vehicle Registration Certificates (RCs) will be issued dig...

மசக்காளிபாளையம் செங்குட்டையில் குப்பை அகற்றி மரக்கன்றுகள் நடவு

கோவை மாநகராட்சி மசக்காளிபாளையம், செங்குட்டை பகுதியில் குப்பை அகற்றி பத்துவகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை மாநகராட்...

Tree Saplings Turn Garbage-Dumping Spot into Green Zone in Masakkalipalayam

The Coimbatore Corporation has cleared accumulated garbage from a municipal site in Senguttai, Masakkalipalayam, and pla...