விவசாயிகளுக்கு வன உயிர்களால் ஏற்படும் பாதிப்பை தடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் - விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்


கோவை, வடகோவை மேம்பாலம் அருகே உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டம் கோவை மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் வனசரக  அலுவலர் எம்.நசீர் வரவேற்புரை வழங்கினார்.



இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வனவிலங்குகள் பிரச்சனை சம்பந்தமாக பல்வேறு கருத்துக்களை வன அலுவலர்கள் முன் வைத்தனர். குறிப்பாக யானைகள், காட்டுப்பன்றிகள், காட்டு எருமைகள், மான்கள், மயில்கள், குரங்குகள் போன்றவற்றை வனத்திலிருந்து வெளியே வந்து பயிர் சேதத்தையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்துகிறதாக கலந்தாய்வுக் கூட்டத்தில் கூறப்பட்டது.






பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுடைய கருத்துக்களை கூறுகையில்:-



விவசாயிகளுக்கு வன உயிர்களால் ஏற்படும் மரணத்திற்கு அரசாங்கம் மனித உயிர்களுக்கு விலை நிர்ணயம் செய்கிறது. மேலும் விவசயிகள் பயிரிடப்படும் விளைநிலங்களுக்கு வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை. அரசு அலுவலர்களால் விவசாயிகள் இழப்பீடு பெறுவது பெரும் சிரமப்படுகின்றனர் . இதற்கு அரசாங்கம் விவசாயிகளின் அக்கறையை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் விவசாயிகளின் வீட்டிற்கு நேரடியாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும். 

மனிதர்களால் காட்டுக்குள் இருக்கும் விலங்குகளுக்கு ஆபத்து இல்லை. மாறாக காட்டு விலங்குகளால்தான் மனிதர்கள் வாழும் இடத்திற்கும் மனிதர்களுக்கும் ஆபத்து. இந்த உண்மைக்குப் புறம்பாக யானைகளுக்கு வழித்தடம் இருப்பதாகவும் அதை மனிதர்கள் தடுப்பதாகவும் இயற்கை ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் மலையோர கிராமங்களில் வசிக்கும் மக்களை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, தடாகம், கோவனுர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, கண்டியூர் போன்ற அனைத்து மலை கிராமங்களிலும் பல நூறு வருடங்களாக எந்த பிரச்சனைகளும் இல்லாமல் விவசாயம் செய்து வருகிறார்கள். ஆனால், கடந்த 10 வருடங்களாகத்தான் இந்தப்பிரச்சனை வந்துள்ளது. வன விலங்குகள் சாப்பிடாத வகையில் பயிரிடுமாறு அறிவுரை சொல்கின்றனர். இந்த நிலை நீடித்தால் சிறுதானியங்களை, பருப்பு வகைகளையும் கண்ணால் கூட பார்க்க முடியாத நிலைமை ஏற்படும். நாட்டு மக்கள் நலன் முக்கியமா? அல்லது காட்டு விலங்குகள் நலன் முக்கியமா? என்று அரசாங்கம் கூற வேண்டும்.

யானைகளை கொன்றால், விவசாயிகளின் மேல் வழக்கு பதிவு செய்கிறார்கள். யானை மனிதனைக் கொன்றால் வன இலாகாவின்மேல் வழக்கு பதிவு செய்வதே இல்லை. ஒரு சில வடமாநிலங்களிலும், கேரளாவிலும் பன்றிகளை சுடுவதற்கு, யானைகளை ரப்பர் குண்டுகளால் சுட்டு விரட்டுவதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். தமிழகத்தில் மட்டும் விவசாயிகள் கஷ்டமும், நஷ்டமும் அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டுமா? இவ்வாறு வன அலுவலர்கள் முன்பு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.



இதில், மத்திய கூட்டுறவு தலைவர் சக்திவேல், தமிழ்நாடு விவசயிகள் சங்கம் தலைவர் பழனிச்சாமி, விவசாயிகள் சங்க தலைவர் வழுக்குப்பாறை பாலு, மாவட்ட வன அலுவலர்கள், வனப்பாதுகாப்பாளர்கள், கோவை மாவட்ட விவாசயிகள், தன்னார்வ அமைப்புகள் கலந்து கொண்டனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...