அழகு மற்றும் சுகாதார மேம்பாட்டுக்கு என கோவை ஆர்.எஸ்.புரத்தில் புதிய மருத்துவமனை மையம் துவக்கம்

அழகு மற்றும் சுகாதாரமான ஆரோக்கியத்திற்கான சிகிச்சைக்கு என கோவை ஆர்.எஸ்.புரத்தில் மருத்துவமனை மற்றும் சலூன் இன்று திறந்து வைக்கப்பட்டது. இது சலூன் மையமாகவும், உடலின் மேற்பரப்பில் அழகு தொடர்பாக ஏற்படும் நோய்கள் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளது.



இந்த மையத்தினை விஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி சிறப்பு விருந்தினராக பங்கேற்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், "ஒரே இடத்தில் மேம்படுத்தப்பட்ட சலூன் சேவைகளும், ஒரு முழுவசதிகளுடன் அழகு மையமும் செயல்படுவது இதுவே முதல் முறை. இச்சேவை கோவை மக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. இதன் மூலம் கோவை மக்கள் தங்கள் அழகு மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தி பயனடைய வேண்டும்'' என்றார்.

பார்க் கல்வி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனுஷா கூறுகையில், "எல்லோரும் ஒருமுறையாவது இந்த மருத்துவமனை சேவைகளை பெற வேண்டும். இந்த அழகு மருத்துவமனை அழகு மற்றும் சுகாதார துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும்'' என்றார்.

மிர்ஷஸ் யெர்த் 2016 விருது பெற்ற ஜெயா மகேஷ், "இது ஒரு அழகு மற்றும் சுகாதாரத்திற்கு என துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவர் தங்களது அழகை மெருகூட்டிக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்'' என்றார்.

ஜுவல் ஒன் அன்டு எம்ரால்டு நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், இந்த அழகு மருத்துவமனை அனைத்து தரப்பு மக்களிடமும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்றார்.

எம்எல்ஆர் நிர்வாக இயக்குநர் கேசிஆர் பாலாஜி, ஒரு இடத்தில் அழகு தொடர்பாக அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த மையம் அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...