ஓசை அமைப்பின் சார்பில் "சூழல் சந்திப்பு" நிகழ்ச்சி


ஓசை அமைப்பின் சார்பில் இவ்வாண்டின் இறுதி  "சூழல் சந்திப்பு" மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி சித்தாபுதுரில் நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக Dr.ஈ.விஜயராகவன் கலந்துக் கொண்டு வனவிலங்குகள் மீட்பு பணியில் எனது அனுபவங்கள் என்ற தலைப்பில் மீட்பு பணி குறித்த அனுபவங்களை  பகிர்ந்துகொண்டார். இவ்விழாவிற்கு ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் டாக்டர் சண்முகசுந்திரம் தலைமை தாங்கினார். 



முன்பாக மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் முதல்வர் அம்மா அவர்கள் வன பதுகாப்பாளர்களுக்கு வாகன வசதி செய்து கொடுத்தும், யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இயற்கையை பாதுகாப்பதில் பெருந்துணையாக இருந்தார் எனவும் கூறினர்.. மேலும் சாகித்ய அகாடமி விருது பெற்ற வண்ணதாசன் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.



இதுகுறித்து ஓசை அமைப்பின் செய்யது அவர்கள் கூறுகையில், வர்தா புயலால் சென்னையில் பாதிக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் வெளிநாட்டு மரங்கள்,எனவே வெளிநாட்டு மரங்களை தவிர்த்த மண் சார்ந்த நாட்டு மரங்களை நட வேண்டும் எனவும், பொள்ளாச்சி சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட மரங்களை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல பகுதிகளில் நடவு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார். 



இந்நிகழ்ச்சியில் தன்னார்வு தொண்டர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...