வெள்ளிங்கிரி அடிவாரத்தில் ஈஷாவின் சிலை பதிக்கும் பணியால் வழித்தடம் மறந்த காட்டு யானை? ஊருக்குள் நுழைந்துவிடும் என பொதுமக்கள் அச்சம்



கோவை மாவட்டம், சாடிவயல் அடுத்த வெள்ளிங்கிரி மலையடிவாரப் பகுதியில் ஈஷா யோக மையம் இயங்கி வருகிறது. இப்பகுதியில் உள்ள முட்டத்துவயல் கிராமத்தில் உள்ள நீரோடை அருகே நேற்றிரவு வந்த 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று அதே பகுதியில் தொடந்து நின்றுகொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். 

இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து யானைக்கு உடல்நலன் பாதிப்பு ஏதேனும் இருக்குமா எனவும் வனத்துறையினர் சோதனை நடத்தினர். 

உடல் சோர்வுடன் நிற்கும் அந்த யானை மக்கள் வாழும் பகுதிக்குள் வராமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் இன்று மாலை அல்லது இரவுக்கு பின் யானையை காட்டுக்குள் விரட்டும் பணியை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். 

இதனிடையே, வனப்பகுதிக்கு அருகில் உள்ள ஈஷா யோகா à®®à¯ˆà®¯à®®à¯ அப்பகுதியில் உள்ள நிலங்களில் சிலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் யானை வழிதெரியாமல் அதே பகுதியில் தொடர்ந்து நின்றிருக்கலாம் என கூறப்படுகிறது. 

கோவை சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களில் 2 யானைகள் உயிரிழந்துள்ள நிலையில் நீண்ட நேரமாக யானை ஒரே பகுதியில் நின்றிருப்பது முட்டத்துவயல் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை யானை நடக்க துவங்கினால் அது மக்கள் வாழும் பகுதிக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...