கோவை-யில் வோடபோன் சூப்பர்நெட் 4ஜி அறிமுகம்

இந்தியவின் முன்னணி தொலைத்தொடர்ப்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் தமிழ்நாட்டில் அதன் வோடபோன் சூப்பர்நெட் 4ஜி சேவையை  à®…றிமுகப்படுத்தியுள்ளது. 



வோடபோன் சூப்பர்நெட் 4ஜி சேவை தமிழ்நாட்டின் கோவை மற்றும் திருப்பூரில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த சேவை 2017 மார்ச் மாதத்திற்குள் தமிழ்நாட்டின் இதர முக்கிய பெரிய நகரங்கள் மற்றும் நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வோடபோன் சூப்பர்நெட் 4ஜி மொபைல் இன்டர்நெட் மூலமாக வீடியோக்கள், இசை போன்றவற்றை அதிகமாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும், இடைவெளியில்லாத வீடியோ காட்சிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான செயலிகளை பயன்படுத்தும் வசதி இருக்கிறது. அதிக வேக வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் மொபைல் கேம்கள், இரு வழி வீடியோ அழைப்புகள் போன்ற வசதிகளை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும்.

இச்சேவை தமிழ்நாட்டில் புதிய மற்றும் நவீன தொழில்நுட்பம் மற்றும் அதிவேக 3ஜி சேவைகள் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிமுகம் மூலம் தற்போது 2ஜி, 3ஜி, 4ஜி சேவைகளை வோடபோன் அதன் சொந்த தொழிநுட்பம் மூலம் தமிழ்நாட்டில் பிரத்யேகமாக அளிக்கிறது.

சர்வதேச நெட் ஒர்க் மற்றும் அனுபவத்தின் மூலம் வோடபோன் தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டம், 4 தொழில்நுட்பத்தில் சர்வதேச ரோமிங் வசதியை இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, ஹங்கேரி, அல்பானி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு அளிக்கிறது. இது விரைவில் மேலும் பல நாடுகளுககு விரிவாக்கம் செய்யப்படும்.

வோடபோன் சூப்பர்நெட் 4ஜி சேவையை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி வோடபோன் இந்தியா வணிக தலைவர்- தமிழ்நாடு, எஸ்.முரளி பேசியதாவது:-

டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியாக வோடபோன் சூப்பர்நெட் 4ஜி சேவையை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். மொபைல் இன்டர்நெட்டில் 4ஜி புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் நம் வேலை மற்றும் வாழ்க்கையில் புதுமை அனுபவம் ஏற்பட்டுள்ளது.

வோடபோன் நிறுவனத்தின் உலகளாவிய நிபுணத்துவம் மற்றும் அனுபவம் மூலம் 20 நாடுகளில் 4ஜி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 4ஜி சந்தாதாரருக்கு என்ன தேவை என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. 

ஏற்கனவே இச்சேவையை பெற்றிருக்கும் சந்தாதாரர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இன்று முதல் கோவை, திருப்பூர் மற்றும் விரைவில் தமிழ்நாடு முழுக்க உலகின் மிகப் பெரிய 4ஜி நெட்வொர்க் அனுபவத்தை வோடபோன் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள்" என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...