உணவு பொருட்களை பழைய செய்தி தாள்களில் உபயோகிக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் வேண்டுகோள்


அனைத்து பேக்கிரிகள், சிறு வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பழைய செய்தி தாள்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் விதிகளை மீறுபவர்களுக்கு உடனடியாக வியாபாரத்திற்கு உரிமம் மற்றும் பதிவு பெற்றுக் கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன்  தெரிவித்துள்ளார். 

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பேக்கிரிகள், சிறு வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்பவர்கள் விற்கப்படும் வடை, பஜ்ஜி போன்டா உள்ளிட்ட உணவு பொருட்களை பழைய நாளிதழ்களில் வைத்து பரிமாறுவதோ, பொட்டலம் செய்து கொடுப்பது உடலுக்கு தீங்கானது, அவ்வாறு தரப்படும் உணவுகள் உண்பதை பொதுமக்களும் தவிர்க்க வேண்டும். செய்தி தாள்களில் உள்ள மை பல்வேறு தீங்கும் தரும் வேதிபொருட்களால் ஆனது. மேலும் பழைய செய்திதாள்களில் உள்ள பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் உடல் நலத்திற்கு வெகுவாக தீங்கு விளைவிக்க கூடியதாகும். இது அஜிரணம், குடல் சம்மந்தமான நோய்கள் மற்றும் புற்று நோய் சம்மந்தமான பாதிப்புகளை வயது வித்தியாசமின்றி குழந்தை முதல் பெரியவர் வரை பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது.

எனவே, அனைத்து பேக்கிரிகள், சிறு வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பழைய செய்தி தாள்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் இதற்கு பதிலாக வாழை இலை போன்ற தீங்கு தராத பொருட்களை கொண்டு உணவு பொருட்களை சுற்றி கொடுக்க வேண்டும் என்றும் பாலிதீன் பொருட்களில் டீ, காபி உணவு போன்ற சூடான பானங்களை பார்சல் செய்து கொடுக்க பயன்படுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது எனவும். மேலும், வியாபாரிகள், சிறு வியாபாரிகள் உணவு பாதுகாப்பு சட்டம் 2006ன் படி உரிமம் மற்றும் பதிவு செய்வதற்கு கால அவகாசம் ஆகஸ்ட் 2016 க்கு பின் நீட்டிக்கப்படவில்லை. எனவே அனைத்து தரப்பினர்களும் உடனடியாக வியாபாரத்திற்கு உரிமம் மற்றும் பதிவு பெற்றுக் கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன்  தெரிவித்துள்ளார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...