ஒரே பக்கத்தில் ஒரு வருடத்திற்கான காலண்டர்


தினம் தினம் ஒரு பக்கத்தை கிழித்து நாள், கிழமையை தெரிந்து கொள்வதற்கு பதில் ஒரு வருடத்திற்கான மொத்த நாட்களும், அந்த நாட்களுக்கான கிழமைகளும் ஒரே பக்கத்தில் இருந்தால் எப்படி இருக்கும்?

இந்த ஒரு பக்க ஸ்மார்ட் காலண்டரை உருவாக்கியுள்ளார் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இசக்கி துரை. சட்டை பாக்கெட்டுக்குள் வைக்கும் அளவிற்கு சிறியதாக இருக்கும் இந்த காலண்டரில் 12 மாதங்களும் அதற்கான நாட்கள் மற்றும் கிழமைகளும் அடங்கியுள்ளது. 

இந்த அவசர யுகத்திற்கு ஏற்ற காலண்டர் இதுவாக இருக்கும் என்று கூறும் இசக்கி, வரப்போகும் 5 ஆயிரமாவது ஆண்டு வரையிலான  à®•ாலண்டர்களை தற்போதே தயாரித்து வைத்துள்ளார்.



ஸ்மார்ட் காலண்டர் குறித்து இசக்கிதுரை கூறியதாவது :- 

எனது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம். பி.இ. மெக்கானிக்கல் படிப்பை முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக பணியாற்றிவருகிறேன். தற்போது, கோவை ராசிபுரம் பகுதியில் வசித்து வருகிறேன். 

இவ்வுலகில், பிறக்கும் ஒவ்வொருவருக்கும் மரணம் நிச்சயம். ஆனால், நாம் மறைந்த பின்னும் வாழ்வது நாம் சாதித்த அல்லது உருவாக்கிய ஒன்று தான் என்பதை உணர்ந்து புதியாதாக ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்று எண்ணினேன்.  à®’ரு நாள் எனது வீட்டில் இருந்த மாத காலண்டரை எடுத்து பார்த்தேன். ஒரு ஆண்டுக்கான ஒட்டு மொத்த தேதி மற்றும் கிழமைகளை ஒரே பக்கத்தில் கொண்டுவர நினைத்து அதற்கான வேலைகளை செய்தேன். 

கடந்த 2008-ம் ஆண்டு முதல் பழைய காலண்டர்கள் துணையோடு பல்வேறு . ஒப்பீடுகள் செய்து பார்த்தேன்.  à®…தன்பின்னர், வருங்காலத்திற்கான காலண்டர்கள் தயாரிக்க தொடங்கினேன். 

அன்றைய காலகட்டத்தில் கணினி இல்லை என்பதால், மனக்கணக்கு போட்டுத்தான் காலண்டர்கள் தயாரித்தேன். தற்போது கணினியின் உதவியோடு மிக வேகமாக காலண்டர்கள் தயாரித்து வருகிறேன். கணினியின் பங்கு அதிகம்  à®‡à®°à¯à®ªà¯à®ªà®¤à®¾à®²à¯ ஒரு வருடத்திற்கான காலண்டர் à®¤à®¯à®¾à®°à®¿à®•்க 10 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இது வரை 5 ஆயிரமாவது ஆண்டுக்கு தேவையான காலண்டர் வரை தயாரித்து  à®®à¯à®Ÿà®¿à®¤à¯à®¤à¯à®µà®¿à®Ÿà¯à®Ÿà¯‡à®©à¯.  à®¤à¯Šà®Ÿà®°à¯à®¨à¯à®¤à¯, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கொடுத்த ஊக்கத்தின் அடிப்படையில் தான், இத்தனை ஆண்டுகளுக்கும் தேவையான காலண்டர்களை தயாரிக்க முடிந்தது. நமது ஸ்மார்ட் போன்களில் கூட அதிகபட்சமாக 60 ஆண்டுகளுக்கு தான் காலண்டர்கள் நாம் பார்க்க முடியும்.



ஒரு வருடத்தில் மூன்று மாதங்களின் தேதி மற்றும் கிழமைகள் ஒரே மாதிரியாக வருகிறது. உதாரணத்திற்கு வரும் ஜனவரி 1-ம் நாள் ஞாயிற்று கிழமை என்றால், ஏப்ரல் மாதத்தின் முதல் நாளும் அதே கிழமையில் வருகிறது. தொடர்ந்து வரும் நாட்களும், கிழமைகளும் அதைப்போலவே தொடர்கின்றன.  à®‡à®¤à¯‡ போல, 60-ல் இருந்து 65 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறு சுழற்சி முறையில் தேதிகளும், கிழமைகளும் பயணிக்கின்றன. அதாவது, 6௦ வருடங்களுக்கு முந்திய காலண்டரும், நடப்பு ஆண்டின் காலண்டரும், தேதியோ அல்லது கிழமையோ மாறாமல் இப்போது அப்படியே வந்து கொண்டிருக்கின்றன.

  

நான் தயாரிக்கும் இந்த ஸ்மார்ட் காலண்டர்களை சில நிறுவனங்கள் அவர்கள் ஊழியர்களுக்கு சிறிய அளவில் அச்சிட்டு கொடுத்துள்ளனர். தற்போது இருக்கும் காலண்டரில் முக்கிய நிகழ்வுகள் மற்றும், விடுமுறை நாட்கள் அச்சிட முடியாது. அதை எவ்வாறு இணைப்பது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறேன். ஸ்மார்ட் காலண்டரை ஆன்ராய்டு செயலி வடிவத்தில் வெளியிடுவதற்கான முயற்சிகள் செய்து வருகிறேன். 

இதுவரை இந்த காலண்டரை விற்பனைக்காக தயாரிக்கவில்லை. வரும் ஆண்டுகளில் பொதுமக்கள் இந்த ஸ்மார்ட் காலண்டர் குறித்து அறிந்து, அதை கேட்கும் நேரத்தில் இவற்றை விற்பனை செய்வேன். 

இவ்வாறு அவர் கூறினார். 

விரைவில் இந்த ஸ்மார்ட் காலண்டர் உலகெங்கிலும் உள்ள வீடுகளில் இடம்பிடிக்க வாழ்த்துக்கள். புது வருடத்திற்கு ஸ்மார்ட் காலண்டர் வாங்கிடலாமா?

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...