ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை கோரி ராஷ்டிரிய ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஆட்சியரிடம் மனு


ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, கோவையில் சேவல்களுடன் மாட்டு வண்டியில் வந்த ராஷ்டிரிய ஹிந்து பரிஷத் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 

அதன்ஒரு பகுதியாக கோவையில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், சேவல்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, ராஷ்டிரிய ஹிந்து பரிஷத் அமைப்பினர் மாட்டு வண்டியில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அப்போது தாங்கள் கொண்டுவந்திருந்த சேவல்களையும் ஒன்றுடன் ஒன்று மோதவிட்டனர். 

ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கு தடை விதித்து தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்க முயற்சிகள் நடப்பதாகவும், இந்த போட்டிகளை தொடர்ந்து நடத்த அனுமதியளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறிய அவ்வமைப்பினர், பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், சேவல்கட்டு உள்ளிட்ட போட்டிகளை தடையை மீறி நடத்துவோம் என தெரிவித்தனர். 

இதையடுத்து மாட்டு வண்டிகளில் வந்தவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அதன்பின்னர் அந்த அமைப்பின் ஒரு பகுதியினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர். இதனிடையே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க சேவல்களுடன் மாட்டு வண்டியில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...