ஊதியப் பிரச்சனைக்கு தீர்வுகோரி பாரதீய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்கம் ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று (இன்று) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஊதியப் பிரச்சனைக்கு தீர்வுகோரி பாரதீய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 



அம்மனுவில், கோவை மாவட்டம், மயிலேரிபாளையம் கிராமம், பொள்ளாச்சி சாலையில் செயல்படும் டி டி கே பிரஷ்டீஜ் லிட் நிறுவனத்தில் ஊழியர்களான நாங்கள் சுமார் 11 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம்.

நிர்வாகம் நிர்ணயிக்கும் அளவிற்கு ஏற்றாற்போல் ஊழியர்களும் தரமான வகையில் சமையலுக்கு தேவையான குக்கர்களை தயாரித்துக் கொடுப்பதால் அதிக லாபத்துடன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இருப்பினும், எங்களுக்குரிய பணிகள் நிர்ணயம் செய்யப்பட்டு, அதற்குரிய சம்பளம் வழங்கப்படுவது இல்லை. ஒசூரில் செயல்படும் எங்களது தலைமை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சமமான பணி மூப்பு பணி அளவுகளை செய்து வரும் தொழிலாளர்களின் சம்பளத்தில் சுமார் 30 சதவிகிதம் மட்டுமே எங்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. 

எங்களது தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு பலன் இல்லாததால் நாங்கள் பி எம் எஸ் என்னும் மிகப்பெரிய மத்திய தொழிற்சங்க அமைப்புடன் இணைக்கப்பட்ட பாரதீய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து மனு அளித்துள்ளோம்.

இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தங்களுக்கு உரிய ஊதியம் பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...